UPDATED : நவ 15, 2011 12:00 AM
ADDED : நவ 15, 2011 11:19 AM
இம்முறை, கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பணித்தரம் மிகவும் மோசமாக உள்ளது என்பது பலரும் அறிந்ததே. பலர் பள்ளிக்கே வருவதில்லை. பலர் கையெழுத்துப்போட்டு விட்டு, தங்களின் சொந்த வேலைகளைப் பார்க்க சென்றுவிடுவதுண்டு. எனவே, அவர்களின் வருகை நேரத்தை சரிசெய்யும் விதமாக, பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வந்தவுடன், தனது வருகையை, பள்ளி தலைமையாசிரியருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்க வேண்டும்.
தலைமையாசிரியர், அந்த எஸ்.எம்.எஸ். தகவல்களைத் மொத்தமாக, பள்ளி தொடங்கும் நேரத்தில், மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். அந்த அதிகாரி, தனக்கு வந்த தகவலை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.
கடைசியாக, இந்த வருகை விபரங்கள் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இதன்மூலம், பள்ளி ஆசிரியர்களின் வருகைப் பதிவு ஒழுங்குபடுத்தப்படும். கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தமிழகம் முழுக்க இத்திட்டத்தை அமல்செய்ய, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
தங்களின் வருகையை காட்டிவிட்டு, பணி நேரத்தில் தங்களின் சொந்த வேலையைப் பார்க்கச் செல்பவர்களை கவனிக்கும் திட்டம் எப்போது வரும்? என்று சில கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
