தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலாண்டு தேர்வில் குளறுபடி: பள்ளி முற்றுகை

காலாண்டு தேர்வில் குளறுபடி: பள்ளி முற்றுகை

காலாண்டு தேர்வில் குளறுபடி: பள்ளி முற்றுகை


UPDATED : அக் 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
காலாண்டு தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட குளறுபடியால் கோவையில் உள்ள சபர்பன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை, பெற்றோர் முற்றுகையிட்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. செப்., 15ல், அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் நடக்கவிருந்த காலாண்டுத்தேர்வு, மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை ராம்நகரில் உள்ள சபர்பன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செப்., 15ல் நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அக்., 3ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டதால், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பின் பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தனியே தேர்வு நடத்துவதாக உறுதியளித்ததால், பெற்றோர் கலைந்து சென்றனர்.
பெற்றோர் கூறுகையில், “1, 2, 4, 6, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு மதியம் 12.00 மணிக்கு தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் 11.30 மணிக்கு பள்ளிக்கு சென்றபோது, தேர்வு காலையிலேயே நடத்தப்பட்டு விட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனால், தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பள்ளி முதல்வரிடம் மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்,” என்றனர்.
பள்ளி முதல்வர் புவனேஸ்வரி கூறுகையில், “ தேர்வு காலையில் நடத்தப்படும் என்பதை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். இதனால், மதியம் நடந்த தேர்வுக்கு 50க்கும் அதிகமான மாணவர்கள் வந்தனர். இந்த மாணவர்களுக்காக, மற்றொரு நாளில் காலாண்டுத்தேர்வு நடத்தப்படும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us