தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்கக் கல்வியில் தமிழகம் மூன்றாவது இடம்!

தொடக்கக் கல்வியில் தமிழகம் மூன்றாவது இடம்!

தொடக்கக் கல்வியில் தமிழகம் மூன்றாவது இடம்!


UPDATED : அக் 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. தற்போது டெல்லி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இமாசல பிரதேசம் நான்காவது இடத்தையும் கர்நாடகம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.


ஏற்கெனவே நான்காவது இடத்தில் இருந்த கர்நாடகம் தற்போது ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜார்கண்ட் 34வது இடத்தையும் பிகார் 35 வது இடத்தையும் பெற்றுள்ளன


மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2006-07ம் ஆண்டுக்கான கல்வி மேம்பாட்டுக் குறித்த அறிக்கையில் (எஜுக்கேஷன் டெவலப்மெண்ட் இன்டெக்ஸ்) இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்விக்கான மாவட்டத் தகவல் அமைப்பின் (டி.ஐ.எஸ்.இ.,) புள்ளி விவரங்களிலிருந்து கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகம் (என்.யு.இ.பி.ஏ.,) இந்த ஆய்வு அறிக்கையைத் தயாரித்துள்ளது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் - ஆசிரியர்கள் விகிதாச்சாரம் உள்பட பல்வேறு அம்சங்களை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us