தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிகரிக்குமா முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை?

அதிகரிக்குமா முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை?

அதிகரிக்குமா முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை?


UPDATED : அக் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு பெருமளவு குறைந்திருப்பதையடுத்து, வரும் ஆண்டுகளில் பொறியியல் முதுநிலை படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் பாதிப்படைந்துள்ளது. கோடிக்கணக்கில் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ள இந்திய ஐ.டி., நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய புதிதாக ஆட்களை எடுப்பதை நிறுத்தியும், குறைத்தும் உள்ளன.
இதனால், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், அம்மாணவர்கள் அதிகளவில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளில் சேர, ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் இத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
‘டான்செட்’ நுழைவுத் தேர்வு இயக்குனர் கணேசன் கூறுகையில், “கடந்த ஆண்டு 70,000 பேர் ‘டான்செட்’ தேர்வு எழுதினர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
அகில இந்திய நுழைவுத் தேர்வான ‘கேட்’ தேர்வு எழுதினால், கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்பதால், இத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் கூட்டத்தில், வரும் ஆண்டுகளில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
தற்போது குறிப்பிட்ட சில பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே முதுநிலை படிப்புகள் உள்ளதால்,  தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக முதுநிலை படிப்புகளை துவக்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளைப் பின்பற்றி தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களை பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது குறித்தும், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள, ‘எஜுசாட்’ வசதியை, தனியார் பொறியியல் கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us