தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியில் சேருவதை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கம்ப்யூட்டர் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கற்றுத்தரும் பணியில் 2,000 ரூபாய் சம்பளத்தில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணியாற்றிவந்த 1,677 பேர், தேர்வு நடத்தப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இவர்களுக்கான கவுன்சிலிங் கடந்த மூன்று நாட்களாக நடந்தது.
இந்நிலையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருவதால், இவர்கள் பணியில் சேருவதை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் பட்டதாரி ஆசிரியர்கள் கவுன்சிலிங் நடந்த எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய ஆசிரியர்கள் கூறியதாவது:
பொதுவாக எந்த பாடத்திற்கும் ஆசிரியர்கள் நியமனம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பட்டம் படித்தவர்களைத் தான் நியமிப்பர். ஆனால், கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணியில் சேர்க்கும்போது, ஓராண்டு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருந்தாலே போதும் என்று கூறப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களில், 40 பேர் மட்டுமே கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள். மற்றவர்கள் வேறு பட்டம் பெற்று கம்ப்யூட்டர் பயிற்சி மட்டும் பெற்றவர்கள். இவர்கள் தற்போது பணி நிரந்தரப்படுத்தப்படும் போது கம்ப்யூட்டர் பட்டம் முடித்து, ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்று பணிக்காக காத்திருக்கும் எங்களுக்கு வாய்ப்பு பறிபோகும் நிலைஉள்ளது.
இதுகுறித்து, நாங்கள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவசரமாக இந்த பணி நிரந்தரம் நடந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின், இவர்களை பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
பணியில் சேர நடத்தப்பட்ட தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்று இருந்ததை 35 சதவீதமாக தன்னிச்சையாக குறைத்ததன் மூலம் 792 பேர் பணி நிரந்தரம் பெற்றுள்ளனர். பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் சுப்ரீம் கோர்ட்டில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அவர்களை நீக்க முடியாது. எனவே, தீர்ப்பு வரும் வரை அவர்களை பணியில் சேர அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us