தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு: ஐ.ஐ.எம்., முக்கிய அறிவிப்பு!

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு: ஐ.ஐ.எம்., முக்கிய அறிவிப்பு!

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு: ஐ.ஐ.எம்., முக்கிய அறிவிப்பு!


UPDATED : நவ 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலி இடங்களை அடுத்த ஆண்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் அண்மையில் மறுத்து விட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் ஏற்படும் காலி இடங்களை அப்படியே விட்டு விடாமல் பொதுப் பிரிவு மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, கிரீமிலேயர் வருமான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.4.5 லட்சமாக உயர்த்தி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை  ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், கிரிமீலேயர் வருமான வரம்பு உயர்வு காரணமாக, மேலும் பல மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெறலாம் என்ற அடிப்படையில் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கிரீமிலேயர் அல்லாத மாணவர்கள், விண்ணப்ப எண், தேர்வு பதிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு புதிய சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். அதாவது ரூ.2.5 லட்சத்திற்கு மேலும் ரூ.4.5 லட்சத்திற்கு குறைவாகவும் ஆண்டு வருமானம் உள்ள ஏற்கெனவே விண்ணப்பித்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இது பொருந்தும். டிசம்பர் 10ம் தேதிக்குள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பெறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதையும் ஐ.ஐ.எம்., வெளியிட்டுள்ள விளம்பரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

அகமதாபாத், பெங்களூர், கோல்கட்டா, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ, ஷில்லாங் ஆகிய இடங்களில் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us