தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் டிப்ஸ்...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் டிப்ஸ்...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் டிப்ஸ்...


UPDATED : நவ 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் கலை, அறிவியல் பாடங்களை நடத்திய இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கிய டிப்ஸ்:

வணிகவியல் மற்றும் பொருளியல் முதுகலை ஆசிரியர் சீனிவாசன்:



  • வினாக்களுக்கு விடைகளை எழுதும்போது பாயின்ட் பாயின்ட்டாக எழுத வேண்டும்.

  • பக்கங்களை நிரப்பினால் மதிப்பெண் கிடைக்காது.

  • புளூ பிரின்ட்டில் உள்ள கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்படும்.

  • கூடுமானவரை ஒவ்வொரு பகுதி முடித்துவிட்டு, அடுத்த பகுதிக்கு சென்றால், முழுமையான மதிப்பெண் கிடைக்கும்.

  • வினாக்களை எந்த இடத்திலும் எழுத வேண்டாம்.

வணிகக் கணித உதவி தலைமை ஆசிரியர் பத்மநாபன்:



  • தேர்வு ஹாலில், 15 நிமிடம் வினாக்களை படிக்க மற்றும் தேர்வு எண் எழுதுவதற்கு கொடுக்கப்படுகிறது. இதில், 10 நிமிடத்தை என்னென்ன வினாக்களுக்கு பதிலளிக்கப் போகிறோம் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

  • ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு புத்தகத்தில் தனியாக பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்தால், 40 மதிப்பெண் எடுத்து விடலாம்.

  • விடைக்கு தேவையான சூத்திரத்தை மறக்காமல் எழுத வேண்டும். சூத்திரத்திற்கு மதிப்பெண் உண்டு.

  • வரைபட கேள்வி, தேர்வுக்கு, அவசியம் வரும். வரைபட தாளை மறக்காமல் விடைத் தாளின் நடுப்பகுதியில் கட்டுவது நல்லது. அப்போதுதான் ‘மிஸ்’ ஆகாது.

  • கால்குலேட்டர் பயன்படுத்துவதால், நான்கு  தசமஸ்தானம் துல்லியாக இருத்தல் அவசியம்.

  • வணிகக் கணித பாடத்தின் முதல் மற்றும் கடைசி பாடம் இரண்டையும் தவறாமல் படித்தால், ‘பாஸ்’ மதிப்பெண்ணை எடுத்து விடலாம்.

  • 50 சதவீதத்திற்கு மேல், எடுத்துக் காட்டு கணக்கு வருவதால் அவைகளை நன்றாக ‘ஹோம் ஒர்க்’ செய்து பார்க்க வேண்டும்.

கணினி அறிவியல் ஆசிரியர் ரமேஷ்:

  • மூன்று வகையான வினாக்கள், வினாத் தாளில் இருக்கும்.

  • வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள ‘சிம்பலை’ ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பிழை இல்லாமல் குறிப்பிட வேண்டும்.

  • முதல் 75 மணித்துளிக்குள் ஒரு மதிப்பெண் வினாக்களை ஓ.எம்.ஆர்., ஷீட்டில் முடித்து விட வேண்டும்.

  • மதிப்பெண்கள் அதிகமாக வாங்க வேண்டும் என்றால், புளூ பிரின்ட்டை பார்த்து தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

  • படங்களுக்கு பிரத்யேகமாக மதிப்பெண் கிடையாது. எனவே, படம் வரைய வேண்டாம்.

  • வினாக்களில் என்ன தவறு என்பதை அடிக்கோடு இடுவதோடு மட்டும் அல்லாமல் என்ன தவறு என்பதை எடுத்து எழுத வேண்டும்.

  • வெளியீடு என கேட்கப்படும் கேள்விகள், கணினி திரையில் எவ்வாறு வருமோ அவ்வாறே எழுத வேண்டும்.

கணக்கு பதிவியல் ஆசிரியர் ஸ்ரீராமன்:



  • ஷெசன் ‘ஏ’வில் ஒரு மதிப்பெண்ணுக்கான வினாக்களில், சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, கூட்டாண்மை கடன் மீதான வட்டி இதுபோன்ற வினாக்கள் வரும்.

  • ஷெசன் ‘பி’யில் ஐந்து மதிப்பெண் வினாக்களில், 2வது பாடத்தில் விடுபட்ட தகவல்களை காண்க. 4வது பாடத்தில், ஏதேனும் ஒரு விற்பனை விகிதம் கேட்கப்படும்.  உதாரணமாக, நிலை சொத்து விற்பனை விகிதம் அல்லது முதல் விற்பனை விகிதம்.

  • ஷெசன் ‘டி’ 20 மதிப்பெண் வினாக்களில், 2வது பாடத்தில் ஒற்றைப் பதிவு முறையிலான இறுதி கணக்குகள் வரும். 4வது பாடத்தில் எவையேனும், 4 விகிதங்கள் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பு நிலை குறித்த அடிப்படையிலான வினாக்கள் வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us