தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விருதுநகரில் ஜெயித்துக்காட்டுவோம்: மழையிலும் குவிந்த மாணவர்கள்

விருதுநகரில் ஜெயித்துக்காட்டுவோம்: மழையிலும் குவிந்த மாணவர்கள்

விருதுநகரில் ஜெயித்துக்காட்டுவோம்: மழையிலும் குவிந்த மாணவர்கள்


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை கழகத்துடன் இணைந்து விருதுநகர் வி. வி. சண்முகநாடார் வள்ளியம்மாள் நினைவு மண்டபத்தில் காலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பிற்பகல் பிளஸ் 2 மாணவர்களுக்கும் வெற்றிக்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கினர். மாணவர்கள் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மழை விட்டு விட்டு பெய்தும் மாணவர்கள் குவிந்தனர்.


காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சியை நிருபர் அரியநாயகம் துவக்கிவைத்து பேசியதாவது: அரசு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இப்பருவத்தில் மாணவர்கள் கற்கும் கல்வி அவர்களின் ஏழ்மை மற்றும் துயரத்தை விரட்டும் துணிவை தருகிறது.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள்:

10ம் வகுப்பு:

ஆங்கிலம்: இன்பலதா (சத்திரிய மகளிர் மேல் நிலைப்பள்ளி விருதுநகர்):
பாடங்களுக்கு பின்னாலுள்ள எக்சசைஸ்களிலிருந்தே அதிகமாக கேள்விகள் கேட்கப்படுகிறது. பிழையின்றி விடையளிக்க வேண்டும். தினமும் ஒரு மனப்பாடப்பகுதி, ஒரு கட்டுரை மற்றும் 2 சிறு கேள்விகள் படித்தாலே அதிக மதிப்பெண் பெறலாம்.

கணிதம்: மகேஸ்வரி (சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்):
வகுப்பில் கவனித்தாலே முழுமதிப்பெண் பெறலாம். எளிய கணக்குகளை முதலில் செய்ய வேண்டும். உதவிப் படங்களை தெளிவாக வரைந்து அளவுகளை குறிக்க வேண்டும்.
அறிவியல்: விஜயலட்சுமி (சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்) :
மின்சாரவியல், அணுஇயற்பியல்,வேதியியல் முதல் பாடம் போன்ற பாடங்களிலிருந்து அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன.
சமுகஅறிவியல்: ஆர். சாந்தி (சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்) :
விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் குறிக்கோளுடன் படித்தால் மாணவர்கள் எளிதில் வெற்றி பெறலாம். . முக்கிய வருடங்கள், இடங்கள் ஆகியவைகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். தேவையானவற்றை உட்தலைப்பு இட்டு சுருக்கமாக எழுத வேண்டும்.

பிளஸ் 2 :

கணிதம்: பண்டரிபாய் (சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்):
முதல் 4 பாடங்களிலிருந்தே சுமார் 130 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. எளிதாக முழு மதிப்பெண் பெறக்கூடிய வரைபட கணக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆங்கிலம்: மீனாட்சிசுந்தரம் (நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்):
மனப்பாடப் பகுதி, கட்டுரைகளை படிப்பதன் மூலம் பின்தங்கிய மாணவர்கள் கூட சிரமமின்றி தேர்ச்சி பெறலாம். அதிக மதிப்பெண் பெற பாடங்களுக்கு பின்னாலுள்ள சினானிமஸ், ஆன்டனிமஸ் மற்றும் பிற கேள்விகளை படித்துக் கொள்ள வேண்டும்.
இயற்பியல்: சாந்தி (சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்):
 1,2,5 மற்றும் 8 வது பாடங்களின் பின்னாலுள்ள கணக்குகளே தேர்வில் கேட்கப்படுகின்றன. பழைய தேர்வு வினாக்களுக்கான பதில்களை தெரிந்து கொண்டாலே பிழையின்றி விரைவாக எழுதலாம்.
வேதியியல்: ஜெரால்டு ஞானரத்தினம் (நோபிள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்):
 4 பக்கம் மட்டுமேயுள்ள எப் தொகுதி தனிம பாடத்திலிருந்து 9 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படுகிறது. வேதிவினைகளில் எலெக்ட்ரான் மாற்றம், ஆரோமார்க் மற்றும் வினைவழிமுறைகளை கவனமாக குறிக்க வேண்டும்.
விலங்கியல்: கார்த்திகேயன் (எஸ்.பி.கே.மேல் நிலைப் பள்ளி, அருப்புக் கோட்டை)
10 மதிப்பெண் கேள்விகளை அரை மணிநேரத்திலும், 5 மதிப்பெண் கேள்விகளை 21 நிமிடங்களிலும், 3 மதிப்பெண் கேள்விகளை 20 நிமிடங்களிலும் ஒரு மதிப்பெண் கேள்விகளை 15 நிமிடத்தில் எழுதி மீதமுள்ள 5 நிமிடத்தில் திருப்பி பார்க்க வேண்டும். 5, 6 மற்றும் 7 பாடங்களை நன்றாக படித்தாலே அதிக மதிப்பெண் பெறலாம்.
தாவரவியல்: இளங்கோவன் (எஸ். எம். மேல் நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை)
தாவரவியலில் 5 மற்றும் 6 வது பாடங்களை மட்டும் படித்தாலே நல்ல மதிப் பெண் பெறலாம். தேவையான இடங்களில் தெளிவாக படம் வரைந்து பாகங் களை குறிக்க வேண்டும்.
நிகழ்ச்சியை தினமலருடன் இணைந்து விருதுநகர் வி.வி.எஸ். நல்லெண்ணெய், நேஷனல் அகாடமி, அபிராமி ஹோட்டல், பூபதி எஜுகேஷனல் சோஷியல் டிரஸ்ட், சிவகாசி பி.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us