தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாழ்வின் முன்னேற்றத்துக்கு தாழ்வு மனப்பான்மையே தடைக்கல்

வாழ்வின் முன்னேற்றத்துக்கு தாழ்வு மனப்பான்மையே தடைக்கல்

வாழ்வின் முன்னேற்றத்துக்கு தாழ்வு மனப்பான்மையே தடைக்கல்


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுப்பிரமணியன் பேசியதாவது:
மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை ஒருபோதும் இருக்கக்கூடாது. அதுதான் வாழ்வின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக உள்ளது. குள்ளம், உடலில் ஊனம் என்று தங்களையே தாழ்வு மனப்பான்மையால் வெறுத்து ஒதுங்கும் பலரை பார்க்க முடியும்.
தமிழ் தந்த அகத்திய முனிவர் குள்ளம்; தமிழகத்தை ஆண்ட அண்ணாதுரை குள்ளம்.  கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து வரும் சச்சின் குள்ளம். அவர்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது.
கிரிக்கெட்டில் உலகிலேயே தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் தென் ஆப்பிரிக்கா அணியின் ஜான்டி ரோட்ஸ். அவருக்கு வலிப்பு நோய் இருந்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த வாசிம் அக்ரமுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. பீல்டிங் டைகர் என்றழைக்கப்பட்ட பட்டோடிக்கு ஒரு கண்ணில் பார்வையே கிடையாது.
இவர்கள், தங்களது உடலில் உள்ள பாதிப்புக்களைப் பற்றி கவலைப்படாமல், வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். குழந்தைகளை எப்போதும் ‘படி, படி’ என்று சொல்லிக் கொண்டேயிருக்க கூடாது பெற்றோர். மாணவர்கள் எடுக்கும் முயற்சி தவறாலம். ஆனால், அவர்கள் ஒருபோதும் முயற்சிக்க தவறக்கூடாது. இவ்வாறு சுப்பிரமணியன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us