தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.பி.ஐ., வளாகத்தில் கல்வி மேலாண்மை மையம்

டி.பி.ஐ., வளாகத்தில் கல்வி மேலாண்மை மையம்

டி.பி.ஐ., வளாகத்தில் கல்வி மேலாண்மை மையம்


UPDATED : நவ 26, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், மூன்று கோடி ரூபாய் மதிப்பில், கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
முதற்கட்டமாக, ஆசிரியர் பயிற்சி இயக்குனரக அலுவலகம் இயங்கிவந்த பழைய கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்திற்கு எதிரில், ‘எல்’ வடிவத்தில் மூன்று அடுக்குகளாக கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. இதில், ஒரு தளம் முழுவதும் தொடக்க கல்வித் துறைக்காக, ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான, கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
கட்டுமான பணியிடத்தில், இருந்த பழைய கட்டடத்தில் ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்தின் அலுவலக பிரிவுகள் இயங்கி வந்தன. இந்த பிரிவுகள் வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால், பழைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் இரண்டு நாட்களாக நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் இடிக்கும் பணி முடியும். அதன்பின், புதிய கட்டுமானப் பணிகள் துவங்கி, 15 மாதங்களில் பணிகள் நிறைவடையும்.
கல்வித் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு நிர்வாகப் பயிற்சி அளிப்பது, கல்வி திட்டங்களை மேம்படுத்துவது சார்ந்த பணிகள், அது தொடர்பாக பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நோக்கமாகக் கொண்டு இந்த மையம் செயல்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us