தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருவள்ளூரில் தினமலர் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி

திருவள்ளூரில் தினமலர் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி

திருவள்ளூரில் தினமலர் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி


UPDATED : நவ 27, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


திருவள்ளூர்:
‘தினமலர்’ ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் வகையில், ‘தினமலர்’ நாளிதழ் கடந்த 13 ஆண்டுகளாக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
திருவள்ளூரில் ஆறாவது ஆண்டாக நவ. 26ம் தேதி ‘ஜெயித்துக் காட்டுவோம்’  நிகழ்ச்சி நடந்தது; மணவாளநகர் என்.டி.பி., திருமண மண்டபத்தில் நடந்தது. காலையில் 10 வகுப்பிற்கும், பிற்பகல் பிளஸ் 2விற்கும் . கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடையுடன் மாணவ, மாணவிகள் ‘சாரை சாரையாக’ மண்டபத்திற்கு வந்தனர்.
மாணவர்கள் அனைவருக்கும் ஜெயித்துக் காட்டுவோம் குறித்த முழு வழிகாட்டி புத்தகம், தேர்வில் வரும் முக்கிய வினாக்கள் மற்றும் புளூ பிரின்ட்,  உடல் நலம் காப்பது குறித்த புத்தகம், குறிப்பு எழுத நோட்டு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு குறித்த பயம் நீங்கி அதிக மதிப்பெண் பெற இந்து மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த கணித ஆசிரியர் கேசவன், அறிவியல் மற்றும் ஆங்கில ஆசிரியர் ஆனந்தன், தமிழ் ஆசிரியர் மதியழகன், சமூக அறிவியல் ஆசிரியர் யுவராஜ் மற்றும் தன்னம் பிக்கை குறித்து ரமேஷ் பிரபா ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
மதியம் 11.00 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி முடிந்தது. பிற்பகல் 12.30 மணிக்கு பிளஸ் 2 மாணவர்களுக் கான நிகழ்ச்சி துவங்கியது. இதில், இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் கோபி ஆனந்தன், வேதியியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், கணித ஆசிரியர் பத்மநாபன், தாவரவியல் ஆசிரியர் கனகசபை, விலங்கியல் ஆசிரியர் கனகசபை, கணிப்பொறி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
வணிகவியல் மற்றும் பொருளியல் ஆசிரியர் சீனிவாசன், வணிகக் கணித ஆசிரியர் பத்மநாபன், கணக்குப் பதிவியல் ஆசிரியர் ஸ்ரீராமன், கணிப்பொறி அறிவியல் ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற குறிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியை ‘தினமலர்’ நாளிதழுடன் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம், பிரதியுக்ஷா பொறியியல் கல்லூரி, திருத்தணி பி.கே.ஆர்., கல்விக் குழுமம் மற்றும் ஜெயஸ்ரீ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்கின.
 
மாணவர் புகழாரம்: 
‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர், ‘தினமலரை’ பாராட்டி கவிதை வாசித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
ஊத்துக்கோட்டை ஆண்கள் அரசு மேனிலைப் பள்ளி மாணவர் கேசவன் மேடையில் பேசிய கவிதை:
எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த நான்
இன்று ‘தினமலர்’ புகழ்பாட பெருமிதமோ பெருமிதம் -ஆம்
எண்ணிலே எழுத்திலே
கண்ணிலே கருத்தினிலே
மண்ணிலே மதத்திலே
விண்ணிலே விதத்திலே
உன்னிலே உயிரிலே
எல்லையில்லா புகழ்கண்ட ஓர் மலர் தான் ‘தினமலர்’
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு
பெண்ணுக்குப் பெருமை எனும்(நதி) பொறுமை அழகு
என்னைப் போன்ற ஆணுக்குத் திறமை அழகு
மண்ணுக்குத் தமிழர் மகிமை அழகு
விண்ணுக்கு நட்சத்திரம் அழகு
எண்ணுக்கு எழுத்து அழகு   -ஆனால்
‘தினமலருக்கு’ மாணவ, மாணவிகளின் சாதனையும்
வரலாற்றுச் சுவடும் தான் அழகு
ஆம், தினமலர் நுõறாண்டு காணும் அந்நாளல்லவா
எம்மைப் போன்ற ஏழையர்களின் பொன்னாள்
வீழ்வது நாமாயினும்
வாழ்வது தினமலராகட்டும்
வாழ்க தினமலர்... ! வளர்க தினமலர்...!!   ஜெய் ஹிந்த்!!!
கவிதை பாடிய மாணவர் கேசவனுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகத்தை, கல்வியாளர் ரமேஷ்பிரபா வழங்கினார். அப்போது மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் கை தட்டி மாணவர் கேசவனை பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us