தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மலேசிய தமிழ் பள்ளிகளை சீரமைக்கக் கோரிக்கை

மலேசிய தமிழ் பள்ளிகளை சீரமைக்கக் கோரிக்கை

மலேசிய தமிழ் பள்ளிகளை சீரமைக்கக் கோரிக்கை


UPDATED : நவ 29, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்டைக்காலம் முதலே மலேசியாவில் இந்தியர்களும், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் தமிழர்களும் வசித்துவருகின்றனர்.
மலேசியாவில் 523 தமிழ் பள்ளிகள் இயங்குகின்றன என்பதே இதற்கு உதாரணமாக விளங்குகிறது. ஆனால் இப்பள்ளிகளில் உள்ளகட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை என்னும் விமர்சனம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது மலேசியன் இந்தியன் காங்கிரஸ் சார்பாக இப் பள்ளிகளை வரும் 2011ம் ஆண்டுக்குள் சீரமைக்க வேண்டும என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனவே மலேசிய அரசு சுமார் 94 கோடி ரூபாய் செலவில் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்டுவது, சீரமைப்பது போன்ற பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை ஒரு முறையான கமிட்டியின் மூலமாக தக்க முறையில் மேற்கொள்வதுடன் பணிகளை முடுக்கிவிடவும் வேண்டும் என்று இந்த கட்சியின் தலைவர் சாமிவேலு வலியுறுத்தியுள்ளார். வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவை மலேசிய மனிதவளத் துறை அமைச்சரும் மலேசிய இந்திய காங்கிரஸ் செயலாளருமான எஸ்.சுப்பிரமணியன் வழங்கவுள்ளார்.
வரும் 2011ம் ஆண்டுக்குள் மொத்த தமிழ்ப்பள்ளிகளில் 60 சதவீத கல்வி நிறுவனங்களை இடித்துக் கட்டுவது, புதுப்பிக்கப்படுவது போன்ற பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்திய காங்கிரஸ் வலியுறுத்திவருகிறது. வம்சாவளி இந்தியர்கள் பங்குச் சந்தையில் ஈடுபடுவதற்கான வரையறைகளையும் அதிகரிக்க வேண்டும் என்றும் இக் கட்சி கோரியுள்ளது.
மலேசியாவில் வசிக்கும் இந்தியரின் வளர்ச்சிக்காக 3 மாதங்களுக்கு ஒரு முறை சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் இவர்கள் கோரிவருகிறார்கள்.மலேசிய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் இந்தியர்கள் அதிகமாக இடம் பெற வேண்டும் என்றும் இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த முறை அரசுப் பணிகளுக்காக நடைபெற்ற நேர்காணலுக்கு 2 ஆயிரம் இந்தியர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் அதில் வெறும் 105 பேருக்கு மட்டுமே அரசு வேலை தரப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது மலேசியாவுக்கு பிழைப்புக்காக சென்ற இந்தியர்களின் தற்போதைய மலேசிய மக்கள் தொகை 26 லட்சமாக உள்ளது. இது மலேசிய மக்கள் தொகையில் 8 சதவீதமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us