தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆண்டாண்டுகளாக காளியம்மன் காலடியில் நடக்கும் பள்ளிக்கூடம்

ஆண்டாண்டுகளாக காளியம்மன் காலடியில் நடக்கும் பள்ளிக்கூடம்

ஆண்டாண்டுகளாக காளியம்மன் காலடியில் நடக்கும் பள்ளிக்கூடம்


UPDATED : டிச 01, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பொள்ளாச்சி:
கோவை, பொள்ளாச்சி அடுத்த குரும்பப் பாளையம் அருகிலுள்ளது பழனிக் கவுண்டன்புதூர். இங்குள்ள அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 62 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
பழனிசாமி என்பவரால் 1944ல் தற்காலிக அங்கீகாரத்துடன் துவக்கப்பட்ட இந்த பள்ளி, ஓராண்டிலேயே நிரந்தரமாக்கப்பட்டது. 64 ஆண்டுகளாக, இங்குள்ள கோவிலில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
பழனிக்கவுண்டன்புதூர் காளியம்மன் கோவில் முன் மண்டபத்தில்தான், வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. அம்மன் சிலை உள்ள கருவறை மட்டும் பாதுகாப் பாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
பல ஆண்டுகளாக கோவில்தான் பள்ளியாக செயல்படுகிறது. முன் மண்டபம் தவிர, வெளியே காலியிடத்தில் தென்னங்கீற்றில் வகுப்பறை அமைத்து, 55 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. 1998-99ல் எஸ்.எஸ்.ஏ., சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
புதிய பள்ளிக் கட்டடத்தில் குடிநீர், கழிப்பிடம், ‘டிவி’ மற்றும் ‘டிவிடி’  போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. இருப்பினும், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் வகையில், கோவில் வளா கத்தில் பாடம் கற்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விருப்பம் காட்டுகின்றனர்.
எனவே, புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாடம் நடக்கிறது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழக்கம்போல் கோவில் முன்மண்டபத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு கல்வியறிவு அதிகரிப்பதற்காகத்தான் கோவிலிலேயே கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் படிக்கும் போதே ஒழுக்கத்தையும் கற்க வேண்டும். அப்போதுதான், அவர் களால் சிறந்த மாணவர் களாக உருவாக முடியும். மற்ற இடங்களை விட கோவிலில் கல்வியறிவு, ஒழுக்கம் அதிகமாக வளர வாய்ப்புள்ளது.
மேலும், கோவில் என்பதால் மாணவர்களுக்கு, பயம் கலந்த மரியாதை இருக்கும். பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப தொடர்ந்து கோவிலில் பாடம் கற்பிக் கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் திருவிழா நடக்கும்போது, அம்மனை  ஊர்வலம் அழைத்துச் செல்ல இங்குள்ள சிலையை வெளியே எடுப்பர். மற்ற நாட்களில் கோவிலிலேயே சிலை இருக்கும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் அம்மனுக்கு வழிபாடு நடக்கிறது; காலை 7 மணிக்கே வழிபாடு நடப்பதால் மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us