தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலை விடுதி மாணவர்கள் உண்ணாவிரதம்

அண்ணாமலை பல்கலை விடுதி மாணவர்கள் உண்ணாவிரதம்

அண்ணாமலை பல்கலை விடுதி மாணவர்கள் உண்ணாவிரதம்


UPDATED : ஆக 29, 2013 12:00 AM

ADDED : ஆக 29, 2013 09:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2013 12:00 AM ADDED : ஆக 29, 2013 09:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள், சாப்பாடு சரியில்லை என நேற்று இரவு திடீர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை விவசாயப் பிரிவு மாணவர்கள், முல்லை விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று இரவு, 8:30 மணிக்கு, விடுதிக்கு சாப்பிடச் சென்றனர். சாப்பாட்டிலும், தண்ணீரிலும் புழு இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள், சாப்பாட்டு தட்டுடன் வெளியேறினர்.

இவர்களுக்கு ஆதரவாக விடுதி மாணவர்கள் 1,000 பேர் திரண்டு நிர்வாக அலுவலக கட்டடம் அருகே கூடி திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் பஞ்சநாதம், விடுதி ஒருங்கிணைப்பாளர் சங்கரன் மற்றும் சிதம்பரம் டி.எஸ்.பி., ராஜாராமன், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். இதில், ஒரு வாரத்தில் மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, உறுதியளித்ததன் பேரில், இரவு 10:00 மணிக்கு, மாணவர்கள் விடுதிக்குச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us