தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டாவது பெற்றோர்: இன்று ஆசிரியர் தினம்

இரண்டாவது பெற்றோர்: இன்று ஆசிரியர் தினம்

இரண்டாவது பெற்றோர்: இன்று ஆசிரியர் தினம்


UPDATED : செப் 05, 2013 12:00 AM

ADDED : செப் 05, 2013 08:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2013 12:00 AM ADDED : செப் 05, 2013 08:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், அப்படியே மாணவரையும் தொற்றிக்கொள்ளும். ஆசிரியர் தங்களது, பொறுப்பை உணர்ந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

எப்படி வந்தது: சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை என கூறினார்.

ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், "சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்" என்கிறார்.

சுய ஆர்வம்: மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணி இருப்பதில்லை. இதில் பொறுமை, அர்ப்பணிப்பு, புதிய தகவல்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது.

வியாபாரம் அல்ல: நாட்டில் கல்விக்கு தான் அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. இதன் பலன் மாணவர்களை சென்றடைகிறதா என்றால் சந்தேகமே. "14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை" முழுமையாக நிறைவேற்றினால், பள்ளி செல்லா குழந்தைகளே நாம் நாட்டில் இருக்க மாட்டார்கள்.

தற்போது தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. அவை கல்வி வழங்குவதை விட, கட்டணம் வசூலிப்பதில் தான், அதிக அக்கறை செலுத்துகின்றன. இதனால் ஏழை மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பது தடைபடுகிறது. கல்விக்கட்டணம் வரைமுறை படுத்த அரசு முன்வர வேண்டும்.

சிறந்த ஆசிரியர்: ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றை ஜனாதிபதியே வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us