UPDATED : செப் 23, 2013 12:00 AM
ADDED : செப் 23, 2013 11:12 AM
தர்மபுரி: தாட்கோ மூலம், 2013-14ம் ஆண்டிற்கான பொருளாதார முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்த, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய ஆன்லைன் மூலம் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
இதில் வரும், 24 ம் தேதி காலை 9 மணிக்கு அரூர் யூனியன் அலுவலகத்திலும், 25 ம் தேதி காலை 9 மணிக்கு, பென்னாகரம் யூனியன் அலுவலகத்திலும், 26 ம் தேதி காலை 9 மணிக்கு தர்மபுரி தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும், அன்று மதியம் 2மணிக்கு நல்லம்பள்ளி யூனியன் அலுவலகத்திலும், 27 ம் தேதி காலை 9 மணிக்கு மொரப்பூர் யூனியன் அலுவலகத்திலும், அன்று மதியம் 2 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் அலுவலகத்திலும், 28 ம் தேதி காலை 9 மணிக்கு பாலக்கோடு யூனியன் அலுவலகத்திலும், அன்று மதியம் 2மணிக்கு காரிமங்கலம் யூனியன் அலுவலகத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முக தேர்வு நடக்கவுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் குறிப்பிட்ட ஆவணங்களின் அசல் மற்றும் இரண்டு நகல்களுடன் தவறாமல் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
