தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நானோ"

"மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நானோ"

"மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நானோ"


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 26, 2013 08:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 26, 2013 08:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: "நானோ தொழில்நுட்பம், மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று ஊட்டியில் நடந்த கருத்தரங்கில், பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பேசினார்.

ஊட்டி அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறை சார்பில், புதிய ஆராய்ச்சி மற்றும் நானோ தொழில் நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கு, நேற்று துவங்கியது. இதில் பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி டேபானிக் பேசுகையில், "நானோ தொழில் நுட்பம் மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மிக கடினமான அறுவை சிகிச்சைகளை, இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தி எளிதாக மேற்கொள்ள முடியும்."

"நானோ தொழில் நுட்பம் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்லூரிகளில், ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நானோ தொழில் நுட்ப அமைப்பு, தயாராக உள்ளது. மாணவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி சமுதாயத்துக்கு பயன்தரக் கூடியதாக இருக்க வேண்டும்" என்றார்.

கல்லூரி முதல்வர் மனோகரன், இயற்பியல் துறை தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கு, 27ம் தேதி வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us