UPDATED : டிச 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
சென்னை: லிம்கா சாதனையாளர்கள் புத்தகம் வினாடி வினா நிகழ்ச்சியில், சென்னை இறுதிச் சுற்றில் இரண்டு பள்ளிகள் தேர்வாயின.
சென்னையில் இருந்து 31 பள்ளிகள் வினாடி-வினா போட்டியில் பங்கேற்றன. இறுதிச் சுற்றில் எட்டு பள்ளிகள் பங்கேற்றன. லேடி ஆண்டாள் வெங்கட சுப்பராவ் பள்ளி முதலிடத்தையும், செட்டிநாடு வித்யாஷ்ரம பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான இந்தப் போட்டியின் தேசிய இறுதிச் சுற்று புதுடில்லியில் நடக்கிறது. அங்கு, ஐந்து பள்ளிகளுடன் சென்னையில் தேர்வான பள்ளிகள் போட்டியிடும். தேசிய அளவில் 250 பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
