தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு ஆரம்ப பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.,

அரசு ஆரம்ப பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.,

அரசு ஆரம்ப பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.,


UPDATED : டிச 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் பல பள்ளிகளை மூட வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு உருவாகி வருகிறது.
இதை தடுக்க ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்களை சேர்த்தனர். இருப்பினும் போதிய பலன் கிடைக்கவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண அரசு ஆரம்ப பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வி அலுவலர்கள் அரசிற்கு பரிந்துரை செய்தனர்.
சமீபத்தில் திருச்சியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு இது பற்றி கல்வித்துறை அலுவலர்களிடம் விவாதம் நடத்தினார். இதை தொடர்ந்து தற்போது ஆரம்ப பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளை துவக்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே உள்ள ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாமா அல்லது புதிதாக ஆசிரியர்களை நியமிக்கலாமா என தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us