தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடஒதுக்கீட்டில் உள்ள நீதி-நியாயம்:அமர்த்தியசென் பேச்சு

இடஒதுக்கீட்டில் உள்ள நீதி-நியாயம்:அமர்த்தியசென் பேச்சு

இடஒதுக்கீட்டில் உள்ள நீதி-நியாயம்:அமர்த்தியசென் பேச்சு


UPDATED : டிச 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் மாநாட்டிலும் பின்னர் அங்கு வந்திருந்தவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேசியதாவது:


கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதியை தேசம் நன்கு உணர்ந்துள்ளது.
இடஒதுக்கீட்டின் கீழ் அதன் மேல்தட்டில் இருப்பவர்கள் பயன் அடைகிறார்கள் என்ற குறை இருக்கிறது. மெரிட்டின் கீழ் சேருபவர்களைவிட இடஒதுக்கீட்டின் கீழ் சேருபவர்கள் அவ்வளவாக சிறப்பாக இருக்க முடியாது போகலாம். ஆனால் நாம் நதி வளைந்து செல்கிறதே என்பதைப் பார்க்காமல் சமுகத்திற்கு பயனளிக்கும் வகையில் நீண்ட கால தொலைநோக்குப் பார்வையில் நதியின் வடிவமைப்பைப் பார்க்க வேண்டும்.
ஜஸ்டீஸ் என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. ஒன்று நீதி. அதாவது சட்ட அமைப்புக்குள்ளான விஷயம். இரண்டாவது நியாயம். அதாவது நல்லதற்கு ஆதரவான விதிமுறைகள். நீதி என்ற வாதத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குப் பதில் அளித்து விட முடியாது. நீண்ட கால தொலைநோக்குப் பார்வை நோக்கிலிருந்து நியாயம் என்ற வாதத்தை பார்க்க முடியும். சமத்துவ சமுதாயத்தில் இடஒதுக்கீட்டில் உள்ள நீதியை லேசாக தூக்கி எறிந்து விட முடியாது.
நம்பகத்தன்மை இல்லாததுதான் நமது வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. உதாரணமாக, மின்சார இணைப்புகள் உள்ளன. போதிய மின்சாரம் கிடைப்பதில்லை. பள்ளிகள் இருக்கின்றன. பள்ளிக் கல்வி முறை சரியாக இல்லை. இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டைத்தான் விரும்புகிறேன். ஜனநாயக நடைமுறையில், எதிர்க்கட்சிகள், சுதந்திரமான
ஊடகங்கள் போன்றவை இருந்தால்தான் நாடு பட்டினியை எதிர்நோக்க வேண்டியதிருக்காது.
தொலைநோக்குப் பார்வையில் நேரு உருவாக்கிய ஐ.ஐ.டி.,க்கள் தற்போது உலக அளவில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களாகத் திகழ்கின்றன.
தொடக்கக் கல்வியின் வளர்ச்சி குறித்து அவர் போதுமான அளவில் கவனம் செலுத்தவல்லை. இதனால்தான் எழுத்தறிவு விகிதத்தில் பெரிய இடைவெளி உள்ளது. அதே நேரத்தில் மானுபாக்ச்சரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற துறைகளில் நாம் முன்னேற்ற பாதையில் உள்ளோம்.
தொழில்நுட்பம், கார்ப்பரேட் லீடர்ஷிப் போன்றவற்றில் ஐ.ஐ.டி. தனது நிபுணத்துவத்தை வழங்கியுள்ளது. எழுத்தறிவு, வறுமை, ஊட்டச்சத்துக் குறைவு போன்ற பிரச்சிகளைத் தீர்ப்பதில் ஐ.ஐ.டி., கவனம் செலுத்த வேண்டும் என்றார் அமர்த்தியா சென்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us