தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதங்கம்: குழந்தைக்கு தவறான வழிகாட்டுவது பெற்றோரே

ஆதங்கம்: குழந்தைக்கு தவறான வழிகாட்டுவது பெற்றோரே

ஆதங்கம்: குழந்தைக்கு தவறான வழிகாட்டுவது பெற்றோரே


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு சார்பில், போலீசாருக்கான சிறப்புப் பயிற்சியில் திட்ட அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார். போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் பேசியதாவது: வளர்ந்து வரும் கலாச்சாரம், நவநாகரீகமான வளர்ச்சியால் குழந்தைகள் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர், மொபைல் போனை பிள்ளைகளுக்கு வாங்கித் தருகின்றனர். அவர்களை கண்காணிப்பதற்கு வழியின்றி வேலைக்குச் செல்கின்றனர்.

எந்த மாதிரி விஷயங்களை கற்றுக் கொள்கின்றனர் என்பது தெரிவதில்லை. குழந்தைகள் தவறான பாதைக்கு செல்வதற்குத் தேவையான வாய்ப்புகளை பெற்றோரே ஏற்படுத்தித் தருகின்றனர். என் பிள்ளை கேட்டதையெல்லாம் வாங்கித் தருவேன் என்று பெருமையாக சொல்லும் பெற்றோரும் உள்ளனர்.

தவறிழைக்கும், பாதிக்கப்படும் பிள்ளைகளை போலீசார் விசாரிக்கும் போது அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பெற்றோரிடம் விளக்க வேண்டும். தமிழகத்தில் மதுரையில்தான் குழந்தை இல்லங்களை ஆய்வு செய்யும் கமிட்டி உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது, என்றார்.

துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா பேசியதாவது: குழந்தைகளுக்கு தவறிழைத்தவரையும், குழந்தையையும் ஒரே இடத்தில் அருகருகே கொண்டு செல்லக்கூடாது. பாதிக்கப்பட்டாலும், தவறிழைத்தாலும், குற்றம் செய்தாலும், அவர்களை குற்றவாளி என்று சொல்லக்கூடாது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமியையும், குற்றம் செய்தவனையும் அரசு மருத்துவமனையில் ஒரே அறையில் வைப்பது தவறு. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக, அவர்கள் வீட்டில் வைத்து விசாரிக்கலாம். அதிலும் சீருடை அணிந்து செல்லக்கூடாது. பெண் போலீசார், பெண் மாஜிஸ்திரேட் என இருந்தால், குழந்தைக்கு இணக்கமான சூழ்நிலை ஏற்படும், என்றார்.

வக்கீல் சிவக்குமார், ஆலோசகர் பால் சாமுவேல், வக்கீல் செல்வகோமதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us