தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி


UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM

ADDED : ஜூன் 21, 2014 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM ADDED : ஜூன் 21, 2014 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: "பொருளாதாரத்தில் பின்தங்கிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றுத்தரப்படும்" என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படும்.

கடந்த 2013 -14ம் ஆண்டில் 2.40 கோடி திட்ட மதிப்பில் 132 பேர்களுக்கு கடனுதவி வழங்கி, மானியமாக ரூ.36.08 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு (2014-15) 103 நபர்களுக்கு ரூ.31 லட்சம் வரை மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். வயது, பொது பிரிவினர் 18 முதல் 35க்குள். நலிவடைந்த பிரிவினர் 18க்கு மேல் 45க்குள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தயாரிப்பு தொழிலுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சம், வியாபாரத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இதற்கு, 15 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படும்.

மேலும் விபரம் வேண்டுவோர் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை, என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us