நெகிழ வைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி
நெகிழ வைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி
UPDATED : ஜூன் 29, 2014 12:00 AM
ADDED : ஜூன் 29, 2014 11:28 AM
மதுரை: மதுரையில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்ற கை, கால்களை இழந்தோர், குறைபாடுடையோர், பார்வையாளர்களை நெகிழச் செய்தனர்.
மாவட்ட பாராலிம்பிக் நீச்சல் சங்கம் சார்பில் தென் மண்டல மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டிகள், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
போட்டி முடிவுகள்
காது கேளாதோர் ஜூனியர் பிரீஸ்டைல் பிரிவில் மதுரையைச் சேர்ந்த சூர்யா முதலிடம், புதுகோட்டை வெங்கடேசன் 2ம் இடம், திண்டுக்கல் பெருமாள் 3ம் இடம் பெற்றனர். சீனியர் பிரிவில் சிவகங்கை மாணிக்கம் முதலிடம், மதுரை சங்கரேஸ்வரன் 2ம் இடம், புதுக்கோட்டை பொன்னுசாமி 3ம் இடம்.
ஆட்டிசம் 1 பிரீஸ்டைல் பிரிவில் மதுரை வீரர்கள் பார்த்திபன், எஸ்.பார்த்திபன், கமலேஷ் கண்ணன், 2வது பிரிவில் முகமது சலீம், பிரஜித், ரோகித் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
எஸ்.1 பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் திண்டுக்கல் வீரர்கள் வெங்கடேசன், அருளரசு, பிரான்சிஸ் முதல் மூன்று இடங்களை வென்றனர். பிரீஸ்டைல் பிரிவில் வெங்கடேசன், அருஸ் ராஜூ, பிரான்சிஸ் முதல் மூன்று இடம். பேக் ஸ்ட்ரோக் பிரிவில் அருள் ராஜூ, வெங்கடேசன், பிரான்சிஸ் முதல் மூன்று இடம்.
எஸ்.2 பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் புதுக்கோட்டை ராமச்சந்திரன் முதலிடம், திண்டுக்கல் கலைச்செல்வன், ஜெகனாதன் 2வது, 3வது இடம். பிரீஸ்டைல் பிரிவில் திண்டுக்கல் லட்சுமணன் முதலிடம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் 2ம் இடம், திண்டுக்கல் கலைச்செல்வன் 3ம் இடம். பேக் ஸ்ட்ரோக் பிரிவில் திண்டுக்கல் ஜெகனாதன் முதலிடம், கலைச்செல்வன் 2ம் இடம், ராமச்சந்திரன் 3ம் இடம்.
எஸ்.3 பிரீஸ்டைல் பிரிவில் மதுரை பெருமாள் முதலிடம், புதுக்கோட்டை துரைசாமி 2ம் இடம், மதுரை கோவிந்தராஜூ 3ம் இடம். பேக் ஸ்ட்ரோக் பிரிவில் பெருமாள் முதலிடம், கோவிந்தராஜூ 2ம் இடம், சிவகங்கை ராஜா 3ம் இடம். பெண்கள் பிரீஸ்டைல் பிரிவில் புதுக்கோட்டை மல்லிகா முதலிடம்.
எஸ். 4 பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் மதுரை அப்துல் சலாம் முதலிடம், புதுக்கோட்டை சரவணகுமார் 2ம் இடம், திண்டுக்கல் தமிழழகன் 3ம் இடம். பிரீஸ்டைல் மற்றும் பேக் ஸ்ட்ரோக் போட்டிகளில் அப்துல்சலாம் முதலிடம், தமிழழகன் 2ம் இடம், சரவணகுமார் 3ம் இடம்.
எஸ்.5 பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் திண்டுக்கல் வேல்முருகன் முதலிடம், மதுரை சுரேஷ் 2ம் இடம், சிவகங்கை சிவம் 3ம் இடம். பிரீஸ்டைல் பிரிவில் வேல்முருகன் முதலிடம், சுரேஷ் 2ம் இடம், திண்டுக்கல்
முனிரத்னம் 3ம் இடம். பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வேல்முருகன் முதலிடம், சுரேஷ் 2ம் இடம், சிவகங்கை சிவம் 3ம் இடம்.எஸ்.11 ஜூனியர் பிரீஸ்டைல் பிரிவில் திண்டுக்கல் வீரர்கள் சரவணகுமார் முதலிடம், தவக்குமார் 2ம் இடம். பிரீஸ்டைல் பிரிவில் புதுக்கோட்டை வீரர்கள் ஜெயகுமார், ரமேஷ், அன்பழகன் முதல் மூன்று இடம். பேக் ஸ்ட்ரோக் பிரிவில் ரமேஷ், ஜெயக்குமார், முருகேசன் முதல் மூன்று இடம்.
எஸ்.5 பெண்கள் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் திண்டுக்கல் பரிமளா முதலிடம், புதுக்கோட்டை வெள்ளையம்மாள், ராஜேஸ்வரி 2வது, 3வது இடம்.
கடும் வெயிலில் தவிப்பு
நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நீச்சல்குளத்தைச் சுற்றி பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் கொதித்தன. மாற்றுத் திறனாளிகள் பெரும்பாலும் கால்களில் செருப்பணியாமல் ஊன்றுகோலுடனும், கைகளால் தவழ்ந்தும் வந்தனர். சூடு தாங்கமுடியாமல் கை, கால்களை உதறியபடி தவித்தனர்.
ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் நீச்சல்குளத்தில் இருந்த தண்ணீரை வாளியில் அள்ளி அள்ளி தரையில் ஊற்றினர். ஒரு கை, இரு கையிழந்தோர், கால்களை இழந்தோர், நல்ல உடல்நிலை உள்ளவர்களுக்கு சவாலாக வேகமாக நீந்தியது, பார்வையாளர்களை நெகிழச் செய்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
