UPDATED : ஜூலை 02, 2014 12:00 AM
ADDED : ஜூலை 02, 2014 11:29 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள வட்டார வளமையங்களில் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் இயங்கும் மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வளமையங்களில் ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியாளர் களுக்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும் 6,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணிக்கான கல்வி தகுதியாக பட்டப்படிப்புடன் கூடிய தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தெரிந்த மற்றும் கணினி இயக்குபவர்கள் தகுதியானவர்களாவர்கள். குறிப்பாக இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமான நியமனமாகும்.
பணிக்கான விண்ணப்பங்களை மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை பத்திரிகையில் வெளியான 10 நாட்களுக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் தபால் மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
