UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM
ADDED : ஜூலை 03, 2014 11:34 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கோலயனூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு பி.டி.ஓ., ஜோதி தலைமை தாங்கினார். சத்துணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மண்டல அலுவலர் கல்யாண சுந்தரி, பி.டி.ஓ.,க்கள் ஜோதி, ராமமூர்த்தி ஆகியோர் விளக்கினர். அரசின் சத்துணவுத் திட்டம், எவ்வித குறைபாடுகள் இன்றி கவனமாக செயல்படுத்திட அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், சிறப்பு பார்வையாளராக தாசில்தார் சுந்தரராஜ் பங்கேற்றார். இதில், சத்துணவு மைய அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் கலந்து கொண்டனர். சத்துணவு திட்ட துணை பி.டி.ஓ., ஜெயபாலன் நன்றி கூறினார்.
