தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு

பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு

பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு


UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM

ADDED : ஜூலை 20, 2014 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM ADDED : ஜூலை 20, 2014 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பாரம்பரியம் அடிப்படையில் விழா கொண்டாட வழி செய்யலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்: மத்திய மனிதவளத் துறையின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதை அறிந்தேன்.

அந்த கடிதத்தில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சி.பி.எஸ்.இ. எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், கேந்திரிய வித்யாலயா, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதுடன் மாநில அரசுகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மாநில, மாவட்ட அளவில் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழமையான தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட தமிழகம், வளமான கலாசாரத்தை கொண்டுள்ளது. தமிழகத்தில் சமூக நீதி மற்றும் மொழியை மையமாக வைத்து வலிமையான இயக்கங்கள் நடந்துள்ளன. எனவே தமிழகத்தில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பொருத்தமற்றது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் மொழி, கலாசாரம் அடிப்படையில், அந்தந்த மொழி வாரம் கொண்டாடப்படுவது பொருத்தமாக இருக்கும். எனவே ஒவ்வொரு மாநிலமும் அங்குள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளிட்டவற்றில் அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பாரம்பரியம் அடிப்படையில் விழா கொண்டாட வழி செய்யும்படி கடிதத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us