தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM
ADDED : ஜூலை 21, 2014 12:24 PM
அ நிறம் | அளவு
பழநி: ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அனைத்து கல்லூரிகளிலும் 50 சதவீத முன்னுரிமை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு 2006ல் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டுவந்தது. அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20 சதவீத முன்னுரிமை வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் முதல் பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதைப்போல ஒன்று முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் பயில்வோருக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர 50 சதவீத முன்னுரிமை வழங்கவேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
