தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாயிகளுக்கு பயிற்சியளித்த தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்

விவசாயிகளுக்கு பயிற்சியளித்த தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்

விவசாயிகளுக்கு பயிற்சியளித்த தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்


UPDATED : ஆக 02, 2014 12:00 AM

ADDED : ஆக 02, 2014 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2014 12:00 AM ADDED : ஆக 02, 2014 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர்: திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவ திட்டத்தில், சின்னமனூரில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாணவிகள் கோமதி, பிரியங்கா, இலக்கியா, புவனா, ஓபுசுமதி, பவித்ரா ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் சின்னமனூர் வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நேரடியாக சென்று பல்வேறு பயிர்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், செயல்முறைகள், பயிர்பாதுகாப்பு, மண்மேம்பாடு, சாகுபடி முறைகள் குறித்து தொடர்ந்து பயிற்சி பெற்றனர். சில பயிர்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் பல்வேறு பயிற்சிகளையும் விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர்.

எரசக்கநாயக்கனூர் விவசாயி குமரவேல் தோட்டத்தில் குழித்தட்டில் காய்கறி நாற்றங்கால் அமைக்கும் முறையை செயல்முறையாக விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.

பல்வேறு காய்கறிகளை விளைவிக்கும் முறையில் குழித்தட்டில் நாற்றங்கால் அமைப்பது எப்படி, அதற்கான தொழில்நுட்பங்கள் என்ன, பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் உள்ளிட்டவைகள் பற்றி இம்மாணவிகள் விளக்கமாக எடுத்துக் கூறினர். பின்னர் விவசாயிகளுக்கு இத்தொழில்நுட்பம் குறித்து பயிற்சியும் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us