தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலெக்டராக ஆசை: கபடி வீராங்கனை சசிரேகா

கலெக்டராக ஆசை: கபடி வீராங்கனை சசிரேகா

கலெக்டராக ஆசை: கபடி வீராங்கனை சசிரேகா


UPDATED : ஆக 10, 2014 12:00 AM

ADDED : ஆக 10, 2014 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2014 12:00 AM ADDED : ஆக 10, 2014 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர், சசிரேகா, 19; கபடி வீராங்கனை. ராணி மேரி கல்லூரியில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு உடற்கல்வியியல் படித்து வருகிறார்.

கல்லூரியில் நடந்து வரும், அகில இந்திய கபடி போட்டியில் அவரை சந்தித்த போது, அவர் கூறியதாவது: என் தந்தை ராமநாதன், டீக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார். என் தாயார், நான் 10ம் வகுப்பு படிக்கும் போதே இறந்து விட்டார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, பி.டி., ஆசிரியை கபடி போட்டியில், ஈடுபட வைத்தார். என் பள்ளி அணிக்காக விளையாடினேன். அதில் நன்றாக விளையாடியதால், சிறந்த வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது. அதற்கு முன், தடகள போட்டிகளில் பங்கேற்று வந்தேன்.

கபடி போட்டியில், நான், 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளேன். அதில் எங்கள் அணி, 30 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஆண்டு, பெங்களூருவில் நடந்த, சப்-ஜூனியர் போட்டியில் எங்கள் அணி பங்கேற்றது. அதில், பலம் வாய்ந்த அணிகளுடன் மோதி, மூன்றாவது இடம்தான் பிடிக்க முடிந்தது. சவாலான இந்த போட்டியை என்னால், மறக்க முடியாது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய அணியில், இடம் பெறுவதே என் லட்சியம். இரண்டு ஆசைகளுக்காக, கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us