ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி; இந்திய மாணவர்கள் ஆர்வம்
ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி; இந்திய மாணவர்கள் ஆர்வம்
UPDATED : நவ 13, 2014 12:00 AM
ADDED : நவ 13, 2014 11:55 AM
புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் ஒரு சுவராஸ்மான உண்மை புலப்படும். அவற்றில், பாதிக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் தென் மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்திய பல்கலைக் கழகங்களின் தரத்தை ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்கள் நன்கு உணர்ந்துள்ளதையும் அறிய முடிகிறது. சர்வதேச தரத்திலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் அளவிலான பேராசிரியர்களும் உள்ளனர்.
கல்வி நிறுவனங்களின் அனுபவத்தை பெறும் வகையில் இருதரப்பு பேராசிரியர்களின் ‘எக்ஸ்சேன்ஞ் புரொகிராம்’கள் நடைமுறையில் உள்ளன. அதேசமயம், இந்திய மாணவர்களும் சர்வதேச அனுபவத்தை பெறும் வகையில் ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புகின்றனர். ஆஸ்திரேலியாவில் படித்த மாணவர்கள் தான் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களுக்கான உண்மையான ‘அம்பாசிடர்’களாக உள்ளனர். ஆஸ்திரேலியாவில் படித்த மாணவர்கள் அந்த அனுபவத்தை இந்திய மாணவர்களுடன் பெருமிதமாக பகிர்ந்துகொள்கின்றனர். ஆஸ்திரேலியா உயர்கல்வியின் தரம் மற்றும் வாய்ப்புகள் பெருமளவு அவர்களை கவர்ந்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியாவில் தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, விருத்தோம்பல் போன்ற துறைகளில் பெருமளவு முதலீடு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லான்ட் பல்கலையில் படித்த ஒரு ஹைதராபாத் மாணவர், தனது படிப்பிற்கு பிறகு, அங்கேயே ‘பிரான்ஞ்சைஸ்’ எடுத்துள்ளார். இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன.
ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் குறித்து இந்திய மாணவர்கள் முழுமையான விபரங்கள் பெற, குறிப்பாக தமிழகத்தில் அவ்வப்போது ‘ஆஸ்திரேலிய கல்வி கண்காட்சி’ நடத்தப்படுகிறது. இதில் தமிழக மாணவர்களின் ஆர்வம் அமோகமாக உள்ளது. இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., என அனைத்து படிப்புகளுக்கும், 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்க பல்வேறு உதவித்தொகை திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.
-மைக்கேல் கார்டர், டிரேட் கமிஷனர், ஆஸ்திரேலியன் டிரேட் கமிஷன்

