உடுமலைப்பேட்டையில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!
உடுமலைப்பேட்டையில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!
UPDATED : நவ 15, 2014 12:00 AM
ADDED : நவ 15, 2014 10:05 AM
உடுமலை: பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, "தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி", உடுமலையில் இன்று(நவம்பர் 15) நடக்கிறது. தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறை குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். அனுமதி இலவசம்; பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் முக்கிய வினாக்கள் அடங்கிய "ப்ளூ பிரின்ட்" புத்தகம் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தினமலர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்நிகழ்ச்சி, உடுமலை ஜி.வி.ஜி., கலை அரங்கில் இன்று (15ம் தேதி) நடக்கிறது. தினமலர் டி.வி.ஆர்., அகாடமி, கல்வி மலர் மற்றும் புரபசனல் எஜூகேசனல் டிரஸ்ட், நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.
பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு காலை 9.00 மணிக்கும், ஆங்கில வழி மாணவர்களுக்கு பகல் 12.30 மணிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு, கோவை, பீளமேடு சர்வஜனா மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் - பங்கஜம், ஆங்கிலம் - மெகருநிஷா, கணிதம் - பாலசுப்ரமணியம், அறிவியல் - மீனலோசினி, சமூக அறிவியல் - மஞ்சுளா உள்ளிட்டோர் ஆலோசனை வழங்குகின்றனர்.
ஆங்கில வழி மாணவர்களுக்கு, கோவை பீளமேடு நேஷனல் மாடல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் - பாரதி, ஆங்கிலம் - சிந்தியா, கணிதம் - சரவணன், அறிவியல் 1 - ப்ரியா, அறிவியல் 2 - ஹேமலதா, சமூக அறிவியல் - பத்மாவதி ஆலோசனை அளிக்கின்றனர். மேலும், சென்னையை சேர்ந்த "மைண்ட் பிரஷ் நிறுவன தலைமை நிர்வாகி கீர்த்தன்யா சிறப்புரை ஆற்றுகிறார்.
தேர்வில் முழு மதிப்பெண் பெறுவதற்கான அனைத்து வழிமுறை குறித்தும் ஆசிரியர்கள் குறிப்பு வழங்குகின்றனர். தேர்வுக்கு தயாராகும் முறை குறித்து ஆலோசனை வழங்குவர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் முக்கிய வினாக்களை உள்ளடக்கிய "ப்ளூ பிரின்ட்" புத்தகம் இலவசமாக வழங்கப்படும்; அனுமதி இலவசம்.
நாளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு
பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி, நாளை (நவ., 16) நடக்கிறது. கோவை சர்வஜனா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தமிழ் - ரஞ்சிதம், ஆங்கிலம் - சாந்தா, கணிதம் - தட்சிணாமூர்த்தி, இயற்பியல் - சங்கர் கணேஷ், வேதியியல் - சிவக்குமார், உயிரியல் - ஸ்ரீசுதா, கணக்கு பதிவியல், வணிகவியல் - விஜயலட்சுமி, பொருளியல் - வித்யா, கம்ப்யூட்டர் சயின்ஸ் - வடகோவை கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்வாணி உள்ளிட்டோர் அறிவுரை வழங்குகின்றனர்.

