UPDATED : டிச 03, 2014 12:00 AM
ADDED : டிச 03, 2014 10:27 AM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே மழை நீர் கடலில் கலக்கும் கால்வாய் உள்ளது.
மாணவ, மாணவிகள் கால்வாய் அருகே விளையாடுவதால் ஆபத்தாக சூழல்நிலை உள்ளது. பொதுமக்கள் கூறுகையில், "சில நாட்களாக நல்ல மழை பெய்துவருவதால் கால்வாயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளை கால்வாய் அருகே செல்லக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியுள்ளோம்.
இப்பகுதியில் தடுப்பு சுவர் கட்டவேண்டும் என, நீண்ட நாளாக அதிகாரிகளிடத்தில் கூறியும் பயன் இல்லை என்றனர். மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளியை சுற்றி காம்பவுண்டு சுவர், அல்லது வாய்க்கால் அருகே தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
