தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடவசதியின்றி சமுதாயக் கூடத்தில் செயல்படும் பள்ளி

இடவசதியின்றி சமுதாயக் கூடத்தில் செயல்படும் பள்ளி

இடவசதியின்றி சமுதாயக் கூடத்தில் செயல்படும் பள்ளி


UPDATED : டிச 06, 2014 12:00 AM

ADDED : டிச 06, 2014 12:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2014 12:00 AM ADDED : டிச 06, 2014 12:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில், போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் அருகிலுள்ள சமுதாய கூடத்தில் படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 137 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். கல்குறிச்சி, ஆலங்குளம், கரிசல்குளம், உடைகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இங்கு படிக்கின்றனர். தற்போது உயர்நிலைப் பள்ளியாக செயல்படுவதாலும், ஆங்கில வழிக்கல்விக்கு கூடுதல் வகுப்பறை தேவைப்படுவதாலும் புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

கூடுதல் வகுப்பறை கட்ட கல்குறிச்சியில் இருந்து கரிசல்குளம் செல்லும் பாதையில் நத்தம் புறம்போக்காக மூன்றரை ஏக்கர் நிலம் கிராம மக்களால் தேர்வு செய்யப்பட்டு கலெக்டருக்கு மனு கொடுக்கப்பட்டது. அந்த இடத்தை அரசு புறம்போக்கு நிலமாக மாற்றினால்தான், அங்கு கட்டடங்கள் கட்ட முடியும் என கல்வித்துறை தெரிவித்து விட்டது. மாற்று ஏற்பாடாக புதுக்குளம் பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

அந்த இடத்தில் பள்ளி செயல்பட்டால் மாணவ, மாணவியர்களுக்கு சரியான பாதை வசதி இல்லை என்றும், நீண்ட தூரம் போவதற்கு பதிலாக அனைத்து மாணவ, மாணவிகளும் மானாமதுரைக்கே சென்று வரலாம் என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்குறிச்சி சசி கூறும்போது: ஊருக்கு அருகே இடம் தேர்வு செய்து வருவாய்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அங்கீகரித்து விட்டனர். ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை 3 கி.மீ.,தள்ளி கங்கையம்மன் குடியிருப்பு அருகே புதுக்குளம் என்ற இடத்தில் கட்ட தீர்மானித்துள்ளனர். தற்போது போதிய வகுப்பறை இல்லாததால் சமுதாயக் கூடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us