தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உடுமலையில் தனித்தேர்வர்களுக்கான மையங்கள் அமைக்க கோரிக்கை

உடுமலையில் தனித்தேர்வர்களுக்கான மையங்கள் அமைக்க கோரிக்கை

உடுமலையில் தனித்தேர்வர்களுக்கான மையங்கள் அமைக்க கோரிக்கை


UPDATED : டிச 16, 2014 12:00 AM

ADDED : டிச 16, 2014 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2014 12:00 AM ADDED : டிச 16, 2014 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு, உடுமலையிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு அறை எண்ணிக்கை, இருக்கை வசதி மற்றும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. தொடர்ந்து, பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், கல்வி மாவட்ட அடிப்படையிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்தேர்வர்களுக்கான தேர்வு மையங்கள் மாணவர்களின் வசதிக்கேற்ப அமைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. நடப்பாண்டில், இப்பிரச்னை தொடராமல் இருக்க, உடுமலையிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலையிலுள்ள தனித்தேர்வர்களுக்கு மாவட்ட கல்வித் துறையிலிருந்து, தேர்விற்கான ஹால் டிக்கட் பெறுவது மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விபரங்கள் முறையாக வருவதில்லை என சில ஆண்டுகளாக புகார் கூறப்படுகிறது. கடந்த 2012-13 பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு, பொள்ளாச்சியில் பாதி மற்றும் தாராபுரத்தில் பாதி என மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், பெரும்பான்மையான தனித்தேர்வர்கள் குழப்பம் அடைந்து, தேர்வு எழுதாமல் தவறவிட்ட நிலையும் ஏற்பட்டது.

உடுமலை கல்வி மாவட்டமாக இல்லாததே இதற்கு முதன்மைக் காரணமாக கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில், உடுமலையிலுள்ள தனித்தேர்வர்களுக்கு உடுமலை பள்ளிகளையே தேர்வு மையங்களாக அமைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உடுமலை தனித்தேர்வர்களுக்கான பயிற்சி மைய ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: உடுமலையில் பிளஸ் 2 தனித்தேர்விற்கு நடப்பாண்டில் 126 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆண்டுதோறும் உடுமலையில் பூளவாடி, கோமங்கலம், போடிபட்டி, குடிமங்கலம், மடத்துகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனித்தேர்வு எழுத நுாற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

இத்தேர்வர்களுக்கு உடுமலையில் தேர்வு மையங்கள் அமைப்பதில், கடந்த சில ஆண்டுகளாக சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தாராபுரம் மற்றும் திருப்பூர் உட்பட தெரியாத பகுதிகளில் சென்று தேர்வு மையங்களை கண்டறியவே தேர்வர்கள் சிரமப்படுகின்றனர். கிராமப்புற மாணவர்கள் சிலர் நீண்ட துாரம் சென்று தேர்வு எழுத வேண்டுமே என எண்ணி தேர்வுகளை எழுதாமலே விடுகின்றனர். உடுமலையிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படுவதே இதற்கான தீர்வாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us