தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"உடல், மனதின் ஆரோக்கியம் விளையாட்டில்தான் அடங்கியிருக்கிறது"

"உடல், மனதின் ஆரோக்கியம் விளையாட்டில்தான் அடங்கியிருக்கிறது"

"உடல், மனதின் ஆரோக்கியம் விளையாட்டில்தான் அடங்கியிருக்கிறது"


UPDATED : டிச 24, 2014 12:00 AM

ADDED : டிச 24, 2014 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2014 12:00 AM ADDED : டிச 24, 2014 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடல், மனதின் ஆரோக்கியம் விளையாட்டில்தான் அடங்கியிருக்கிறது. இதை, வரும் தலைமுறையினருக்கு உணர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் மதுக்கரை, குரும்பபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஜயராகவன், 45.

இவர், 1982ல், மேட்டுப்பாளையம், மகாஜன மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்தார். இப்பள்ளி மைதானமே விளையாட்டின் அடிப்படையான ஓட்டப்பந்தயத்தை இவருக்கு கற்றுகொடுத்துள்ளது. அப்போதே, பள்ளி, மாவட்ட, மாநில அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றார். மேல்படிப்பை, வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், 1985ம் ஆண்டு கோவை அரசு கலைக் கல்லுாரியில், இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

உடற்கல்வி பாடத்தில், 1890ல் பெரியநாயக்கன்பாளையம், மாருதி கல்லுாரியில், இளங்கலை; 1991ம் ஆண்டு, மதுரை காமராஜர், கல்லுாரியில் முதுகலை பட்டம் பெற்றார். 1992ல் மதுரை, காமராஜர் கல்லுாரியில், டிப்ளமோ யோகா படிப்பை முடித்தார்.

அடுத்து, ஆறு ஆண்டுகள், தம்பு மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஆனைமலை பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், ஓராண்டும், சொக்கம்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆண்டுகளும் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இவரது பயிற்சியால், இவர் பணியாற்றிய பள்ளி குறுமைய போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

கடந்த, 2011ம் ஆண்டிலிருந்து, மதுக்கரை, குரும்பபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். தனது பயிற்சியின் நுணுக்கத்தால், எண்ணிலடங்கா மாணவர்களின் சாதனைக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். மாணவர் சாரண, சாரணிய இயக்கத்தின், மாவட்ட பயிற்சி கமிஷனராகவும் பணியாற்றி வருகிறார்.

உடற்கல்வி ஆசிரியர் விஜயராகவன் கூறுகையில், "நாட்டின் வளர்ச்சியில் பங்குள்ள ஒவ்வொரு துறைக்கும் விளையாட்டே ஆரோக்கியமானதாக அமையும். யோகா, தியானம், உள்ளிட்டவற்றால் கிடைக்கும் அமைதியை, தரக்கூடிய ஒரே துறை விளையாட்டு. யோகா பயிற்சியை, என் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது, கல்லுாரி மாணவர்களுக்கும் அளித்து வருகிறேன்.

மேலும், 2001ம் ஆண்டு கோவை மத்திய சிறைக் கைதிகளுக்காக யோகா பயிற்சியும் அளித்துள்ளேன். ஒவ்வொரு மாணவர்களின் திறமையையும் அறிந்து, அதற்கேற்ப பயிற்சி கொடுத்து, உலகிற்கு அவர்களை அறிமுகப்படுத்துவதில்தான் என் வாழ்நாள் லட்சியம் அடங்கியுள்ளது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us