UPDATED : ஜன 14, 2015 12:00 AM
ADDED : ஜன 14, 2015 10:38 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளிகளின் 125வது ஆண்டு விழாவையொட்டி, கடந்தாண்டு நவ.,15ல் கே.வி.எஸ்., மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், கே.வி.எஸ்., நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் 3,849 மாணவர்கள் கலந்து கொண்ட உலகின் மிக நீளமான யோகா சங்கிலி உருவாக்க, கின்னஸ் சாதனை முயற்சி நடந்தது.
இதை ஜன.,7ல் உலக கின்னஸ் சாதனை பதிவு நிறுவனம், உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது என, கே.வி.எஸ்., மேனேஜிங் போர்டு செயலர் மதன் மோகன் தெரிவித்துள்ளார்.
