தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எப்போது திறக்கப்படும் புதிய அங்கன்வாடி கட்டடம்?

எப்போது திறக்கப்படும் புதிய அங்கன்வாடி கட்டடம்?

எப்போது திறக்கப்படும் புதிய அங்கன்வாடி கட்டடம்?


UPDATED : ஜன 16, 2015 12:00 AM

ADDED : ஜன 16, 2015 02:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2015 12:00 AM ADDED : ஜன 16, 2015 02:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: அன்னூரில், ஐந்து லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் எட்டு மாதங்களாக மூடிக் கிடக்கிறது.

அன்னூர் பேரூராட்சி, செல்லனூரில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இம்மையத்தில், இரண்டு வயது முதல், ஐந்து வயது வரையிலான 35 குழந்தைகள் படிக்கின்றன. அங்கன்வாடிக்கு சொந்த கட்டடம் இல்லாததால், வாடகை இல்லாத வேறு சிறிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், கருப்பசாமி ஒதுக்கிய ஐந்து லட்சம் ரூபாயில், கடந்த ஆண்டு அங்கன்வாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. செல்லனூர் மக்கள் கூறுகையில், ஐந்து லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டி முடித்து, எட்டு மாதங்களாகி விட்டது. ஆனால், இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், குழந்தைகள் மிகச்சிறிய அறையில் நெருக்கடியான நிலையில் படிக்கின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us