தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆசிரிய, ஆசிரியர்களுக்கான பூப்பந்து போட்டி

பள்ளி ஆசிரிய, ஆசிரியர்களுக்கான பூப்பந்து போட்டி

பள்ளி ஆசிரிய, ஆசிரியர்களுக்கான பூப்பந்து போட்டி


UPDATED : ஜன 17, 2015 12:00 AM

ADDED : ஜன 17, 2015 02:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2015 12:00 AM ADDED : ஜன 17, 2015 02:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட அளவில் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்களுக்கான பூப்பந்து போட்டியில் டி.என்.ஜி.ஆர்.,பள்ளி முதலிடம் பெற்றது.

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு வாலிபால், பூப்பந்து போட்டியும்; ஆசிரியைகளுக்கு த்ரோபால், பூப்பந்து ஆகிய போட்டிகளும் கல்லுாரியில் நடந்தன.

* ஆசிரியர்கள் பிரிவு வாலிபால் இறுதி போட்டியில், தெற்குபாளையம் ஏ.வி.பி.,மெட்ரிக் பள்ளி, 25-12, 25-18 புள்ளி கணக்கில் மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளியை வென்று முதலிடம் பிடித்தது.

பூப்பந்து போட்டியில், வரதராஜபுரம் டி.என்.ஜி.ஆர்., பள்ளி, 29-20, 29-18 புள்ளி கணக்கில் மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளியை வென்று முதலிடம் பிடித்தது.

* ஆசிரியைகள் பிரிவு த்ரோபால் இறுதி போட்டியில், பீளமேடு ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளி, 15-2, 15-2 புள்ளிக் கணக்கில் நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியை வென்று முதலிடம் பிடித்தது.

பூப்பந்து போட்டியில், டி.என்.ஜி.ஆர்., பள்ளி, 29-15, 29-18 புள்ளி கணக்கில் மகாஜன பள்ளியை வென்று முதலிடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us