உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
UPDATED : ஜன 31, 2015 12:00 AM
ADDED : ஜன 31, 2015 12:07 PM
நந்தனம்: அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், உடற்கல்வியியல் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு உதவிபெறும் இந்தக் கல்லூரியில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, 50க்கும் அதிகமான மாணவ, மாணவியர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும்; கல்லூரி மைதானத்தில், மற்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை, அவர்கள் வலியுறுத்தினர். டில்லியில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
