இந்திய மாணவர்களுக்கான பிரிட்டன் உதவித்தொகைகள் அதிகரிப்பு
இந்திய மாணவர்களுக்கான பிரிட்டன் உதவித்தொகைகள் அதிகரிப்பு
UPDATED : பிப் 07, 2015 12:00 AM
ADDED : பிப் 07, 2015 02:07 PM
கிரேட் பிரிட்டன் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் கவுன்சில், சென்னையில், கிரேட் பிரிட்டன் ஸ்காலர்ஷிப்கள் - இந்தியா - 2015 ஐ அறிவித்துள்ளது.
இந்தாண்டு, 401 ஸ்காலர்ஷிப்புகள் மற்றும் கடந்த 2 ஆண்டுகளில் 750க்கும் மேற்பட்ட ஸ்காலர்ஷிப்புகளை வழங்கியுள்ள கிரேட் பிரிட்டன் ஸ்காலர்ஷிப்புகள், இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகைகளாக, இந்த 2015ம் ஆண்டில் திகழும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகைகளின் மதிப்பு, தோராயமாக, பிரிட்டன் மதிப்பில் 1.51 மில்லியன் பவுண்டுகள்(இந்திய மதிப்பில் 151 மில்லியன் ரூபாய்கள்).
மேலும், பிரிட்டன் அரசின் உலகளாவிய ஸ்காலர்ஷிப் திட்டமான செவெனிங் உதவித்தொகைகளும், இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளில், இந்திய மாணவர்களுக்கு, தனது செவெனிங் உதவித்தொகைகளின் மதிப்பினை, பிரிட்டன் அரசு, நான்கு மடங்காக்கவுள்ளது மற்றும் இதன்மூலம், செவெனிங் உதவித்தொகையை, உலகளவில் அதிகம் பெறும் நாடாக, இந்தியா திகழும்.
கடந்த 2013-14 நிதியாண்டின் 0.6 மில்லியன் பவுண்டுகளிலிருந்து, 2015-16 நிதியாண்டு முதலீடு, 2.4 மில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்கப்பட்டிருப்பதன் மூலமாக, 130 இந்திய ஆய்வாளர்களுக்கு, முழுமையான நிதியுதவியுடன் கூடிய, உலகத்தரத்தினாலான கல்வி வழங்கப்படவுள்ளது.
