UPDATED : பிப் 08, 2015 12:00 AM
ADDED : பிப் 08, 2015 10:28 AM
அ நிறம் | அளவு
தொண்டி:தொண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் திருட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த சீனிராஜன் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல ஆயிரம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் திருடு போனது.
அதேபோல் இப்பள்ளியிலும் திருட்டு நடக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியவும், இரவு காவலர் நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
