தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இறுதி கலந்தாய்வு எப்போது?

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இறுதி கலந்தாய்வு எப்போது?

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இறுதி கலந்தாய்வு எப்போது?


UPDATED : செப் 07, 2015 12:00 AM

ADDED : செப் 07, 2015 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2015 12:00 AM ADDED : செப் 07, 2015 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு, பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. இதில், 2,655 இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்றன. மீத இடங்களுக்கு, இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்தது.

இதில், அனைத்து இடங்களும் நிரம்பின; செப்., 1 முதல் வகுப்புகள் துவங்கி விட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்கள், கல்லுாரியில் சேர, இம்மாதம், 15ம் தேதி கடைசி நாள். இதில், ஏற்படும் காலியிடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்பி விடும். இந்த இடங்கள் குறித்த விவரங்கள் கிடைத்து, இம்மாதம், 20ம் தேதிக்கு பிறகே, இறுதி கட்ட கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது என, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் இடம்: 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், இடம் கிடைக்காத பொதுப்பிரிவு மாணவர்கள் எட்டு பேர், சுப்ரீம் கோர்ட் வரை சென்று, அரசு கல்லுாரிகளில் கூடுதலாக உருவாக்கப்படும் இடங்களில், சேரும் உத்தரவை பெற்றுள்ளனர். அதனால், பொதுப்பிரிவில், 27 மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us