தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப்யூட்டர் கல்வியை கற்கும் ஆதிவாசி மாணவர்கள்

கம்ப்யூட்டர் கல்வியை கற்கும் ஆதிவாசி மாணவர்கள்

கம்ப்யூட்டர் கல்வியை கற்கும் ஆதிவாசி மாணவர்கள்


UPDATED : செப் 21, 2015 12:00 AM

ADDED : செப் 21, 2015 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2015 12:00 AM ADDED : செப் 21, 2015 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி
: வால்பாறையில் அடிக்கும் குளிரிலும், கொளுத்தும் வெயிலிலும், கடுங்குளிரிலும் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல், மழைக்கு கூட பள்ளி அருகில் ஒதுங்காத ஆதிவாசி மாணவர்கள், இன்று அரசு உயர்பதவி வகித்து, எங்களாலும் சாதிக்க முடியும் என்று வரிந்து கட்டிக்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் காடம்பாறை, கருமுட்டி, மாவடப்பு, ஈத்தக்குழி, பரமன்கடவு, சங்கரன்குடி, வில்லோனி நெடுங்குன்று, கல்லார் உள்ளிட்ட பல்வேறு செட்டில்மெண்ட் பகுதியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் வனப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

பள்ளிக்கூடம் என்றால் என்ன என்று தெரியாமல், வனப்பகுதிக்குள்ளேயே தங்களது வாழ்க்கையை தொடர்ந்தனர். இவர்கள் தற்போது, கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு, பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசும் ஆதிவாசி மாணவர்களின் கல்வித்தரம் உயரும் வகையில், வால்பாறை கக்கன்காலனியில் நடத்தி வரும் அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளயில், பல்வேறு செட்டில்மெண்ட் பகுதிகளை சேர்ந்த, 63 மாணவர்கள் படிக்கின்றனர்.

ஆரம்பத்தில் பள்ளி செல்ல தயக்கம் காட்டிய மாணவர்களை, இந்தப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களுடன் நண்பனாக பழகி, அவர்களை அரவணைத்து நாள் முழுவதும் மாணவர்களுடன் இருந்து வழி நடத்தினர். தற்போது ஆதிவாசி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, மாணவர்களின் கல்வித்தரமும் வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. இவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியும், எஸ்.எஸ்.ஏ.,சார்பில் கணினி மூலம் ஆங்கிலவழிக்கல்வியும் கற்றுத் தரப்படுகிறது. 

பள்ளித்தலைமை ஆசிரியர் ராஜகோபால் கூறியதாவது, ஆதிவாசி மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்திறமை உள்ளது. பாடத்தை ஒரு முறை நடத்தினாலே போதும் எளிதில் புரியும் தன்மை கொண்ட மாணவர்கள் இவர்கள். மாணவர்களிடையே ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர ஆசிரியர்கள் அவர்களுக்கு எளிதில் புரியும் விதம் திறம்பட பாடம் நடத்துகின்றனர். மாணவர்களின் எளிமை, அமைதியான பேச்சு, தெளிவான முடிவு ஆகியவை அவர்களை வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்றால், அதில் ஆசிரியர்களின் உழைப்பும் அடங்கியுள்ளதுஇவ்வாறு ராஜகோபால் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us