UPDATED : செப் 30, 2015 12:00 AM
ADDED : செப் 30, 2015 10:26 AM
அ நிறம் | அளவு
சென்னை
: சென்னை, ஆர்.கே.நகரில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
- தேனி, ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும். தேனி - வீரபாண்டி; ஈரோடு - சத்தியமங்கலம்; கன்னியாகுமரி - நாகர்கோவிலில் அமையும், இந்தப் புதிய கல்லுாரிகளுக்கு தலா, 8.48 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
- சென்னை ஆர்.கே.நகரில், புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரி துவக்கப்படும். இதற்கு, 8.48 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
- புதிய அரசு கல்லுாரிகள் துவக்கப்படுவதன் மூலம், தமிழகத்தில், அரசு கலைக் கல்லுாரிகள் இல்லாத, மாவட்டமே இல்லை என்ற நிலை உருவாகும்
