UPDATED : அக் 05, 2015 12:00 AM
ADDED : அக் 05, 2015 12:17 PM
திருப்பூர்
: தேர்வு விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார்
பள்ளிகள், இன்று
திறக்கப்படுகின்றன; முதல் பாட
வேளையிலேயே, புத்தகங்கள் வழங்க,
கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒன்றாம்
வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு
வரை, முதல் பருவத்தேர்வு, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2
வரை, காலாண்டு தேர்வு நடைபெற்றதை அடுத்து,
செப்., 26 முதல், அக்.,
4 வரை, ஒன்பது நாட்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்றுடன்
விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து, பள்ளிகள் இன்று
திறக்கப்படுகின்றன.
முப்பருவ முறை கல்வி திட்டத்தில், பள்ளிகளில் இரண்டாம் பருவம், இன்று துவங்குவதால், மாணவ-மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. வகுப்பு வாரியாக, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தகங்கள் பிரித்து, அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கான நான்காவது செட் சீருடைகளும் வழங்கப்பட உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், முதல் பாட வேளையில், பாடப்புத்தகங்கள், சீருடை வழங்கவும், அவை முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து அறிக்கை தரவும், கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
