தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நர்ஸ் தேர்வு ரத்து செய்ய வழக்கு

நர்ஸ் தேர்வு ரத்து செய்ய வழக்கு

நர்ஸ் தேர்வு ரத்து செய்ய வழக்கு


UPDATED : அக் 10, 2015 12:00 AM

ADDED : அக் 10, 2015 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2015 12:00 AM ADDED : அக் 10, 2015 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ் பணிக்கு
, 7243 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஒத்தி வைத்தது.

ராமநாதபுரம் ராஜேஸ்வரி மனுஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 2013 ல் ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ் பணியில் நியமிக்கப்பட்டேன். ஒப்பந்த அடிப்படையில் 7243 நர்ஸ்களை தேர்வு செய்யும் அறிவிப்பை 2015 ஏப்.,19 ல் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வில் பங்கேற்றேன். நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் மதிப்பெண் பெற்றேன். சிலருக்கு மட்டும் பணி நியமன உத்தரவு வழங்கியுள்ளனர். மற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, பணி நியமனம் வழங்கப்படும் என்றனர்.

ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர், அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிகின்றீர்கள். பணி நீட்டிப்பு வழங்க முடியாது, என்றார். பணிவரன் முறைப்படுத்துவதில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நர்ஸ்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நர்ஸ் பணி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். என்னை பணி நீக்கம் செய்ய தடை விதித்து, பணியை வரன்முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராஜேஸ்வரி மனு செய்திருந்தார். 


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us