தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இ சென்டர்களில் விண்ணப்பம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இ சென்டர்களில் விண்ணப்பம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இ சென்டர்களில் விண்ணப்பம்


UPDATED : அக் 19, 2015 12:00 AM

ADDED : அக் 19, 2015 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2015 12:00 AM ADDED : அக் 19, 2015 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்
: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்
, அரசு இ-சேவை மையங்களில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு, விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:

திருவள்ளூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம், இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர பதிவு செய்தல்; தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல்; விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகள், புதியதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 

இந்த சேவைகளை பயன்படுத்தி, குறைந்த செலவில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us