தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆன்லைன் கலந்தாய்வு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆன்லைன் கலந்தாய்வு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆன்லைன் கலந்தாய்வு


UPDATED : நவ 06, 2015 12:00 AM

ADDED : நவ 06, 2015 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2015 12:00 AM ADDED : நவ 06, 2015 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்
: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
, மதமாறிய கிறித்தவ ஆதித்திராவிடர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகை வழங்குதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. 

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாநிதி தலைமை தாங்கி, விளக்கவுரை நிகழ்த்தினார். பின்னர், மாணவர்களுக்கான உதவி தொகை விபரங்களை, உதவி கணக்கு அலு வலர் மலர்விழி கூறினார்.

இதில், அரசு மற்றும் தனியார் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 145 நிறுவன முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு 180 அரசு மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று, உதவித்தொகை ஆன்-லைன் மூலம் பெறுதல் சம்பந்தமான தகவல்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், உதவியாளர் சுப்ரமணியன் உட்பட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us