UPDATED : நவ 07, 2015 12:00 AM
ADDED : நவ 07, 2015 10:55 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி
:
புதுச்சேரி அருண்சர்மா தொண்டு நிறுவனம் சார்பில் உதவித் தொகை வழங்க நேர்காணல்
வரும் நாளை நடக்கிறது.
குழு தலைவர் பிரபாதேவி கூறியதாவது:
உழவர்கரை தொகுதி
மக்களுக்கு 3 ஆண்டுகளாக அருண் சர்மா தொண்டு
நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்
தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு (2015-16) உதவித் தொகை வழங்க நேர் காணல் வரும் 8 ம் தேதி காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை உழவர்கரை தொகுதியில் உள்ள கம்பன் நகர், 5 வது குறுக்குத் தெருவில் உள்ள அருண்சர்மா தொண்டு நிறுவன
அலுவலகத்தில் நடக்கிறது.
தொண்டு நிறுவன நிறுவனர் வீரராகு முன்னிலையில் நடக்கும் நேர்காணலில் தகுதியுடைய மாணவர்களுக்கு அன்றே டோக்கன் வழங்கப்படும். அதனை பெற்று கல்வி உதவித் தொகை பெறலாம்.
