தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல்; ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல்; ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல்; ஆசிரியர்களுக்கு பயிற்சி


UPDATED : டிச 06, 2015 12:00 AM

ADDED : டிச 06, 2015 08:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2015 12:00 AM ADDED : டிச 06, 2015 08:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி
:
தாமதமாக கற்றல் திறன் மலரும் மாணவர்களுக்கான குறைதீர் கற்பித்தல் பயிற்சி முகாம் நடந்தது.

பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மையத்திற்குட்பட்ட தொடக்க நிலை வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. ஆச்சிப்பட்டி, ஜமீன் முத்துார், புளியம்பட்டி, வடக்கிப்பாளையம், நெகமம், மன்ணுார் ஆகிய மையங்களில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சியினை உதவித்தொடக்க கல்வி அலுவலர் மேரி மார்கரேட், கூடுதல் உதவித்தொடக்க கல்வி அலுவலர் கண்ணபிரான், அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் (பொ) கவிதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இப்பயிற்சி முகாமில், 2014-15ம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த திறனாய்வுத்தேர்வில், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப்பாடங்களில் தாமதமாக கற்றல் திறன் மலரும் மாணவர்கள், பல திறன்களில் குறைவான அடைவே பெற்றுள்ளனர். அவர்கள் பொதுவாக செய்யும் பிழைகளை இனம் கண்டு, அவற்றை களைவதற்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

தாமதமாக கற்கும் மாணவர்களின் இடர்பாடுகள், குறுகிய கால நினைவுத்திறன், மெதுவாகச் செயல்படுதல், சிந்திக்கும் திறனில் குறைபாடுகள், கருத்துகள் அறியாததால் மன அழுத்தம், அனைவருக்கும் பொதுவான கலைத்திட்ட அமைப்பு, போதுமான ஆர்வமூட்டுதல் இல்லாமல் இருப்பது; தாமதமாக கற்கும் மாணவர்களுக்கு தனிக்கவனமின்மை போன்றவையாகும்.

இம்மாணவர்களுக்கு கடைசி நேர பாட வேளையில் கற்பித்தல் அல்லது மாற்று வழிகளில் கற்பித்தல் அல்லது வாய்வழி, காட்சி வழியாக கற்பித்தல் சாலச்சிறந்தது. இம்மாணவர்களுக்கு எளிய முறையில் பாடல் மூலமாகவும், கதை மூலமாகவும், பொம்மலாட்டம் மூலமாகவும் தமிழ், கணிதம் புரிய வைக்கலாம் என்கின்றனர் கதை சொல்லி வெங்கடேஸ்வரன் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள். 

ஆச்சிப்பட்டியில் நடந்த முகாமில், கற்றல், தாமதமாக கற்றல் திறன் மலரும் மாணவர்களுக்காக நடந்த பயிற்சி முகாமில், கதை சொல்லி வெங்கடேஸ்வரன் பயிற்சி அளித்தார். அப்போது, மாணவர்களை கொண்டு, பொம்மலாட்டம் மூலமாக பாடங்களை எப்படி எளிதாக கொண்டு செல்ல முடியும் என்பதை ஆசிரியர்களுக்கு விளக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us